பெண்களுக்கு தீபாவளி சர்ப்ரைஸ்!

Filed under: அரசியல்,தமிழகம் |

கடந்த செப்டம்பர் மாதம் மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி இத்திட்டத்தின் பயனாளிகளுக்கு அவர்களது வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

இம்மாதம் 12ம் தேதி தீபாவளி பண்டிகை வரவிருப்பதை அடுத்து முன்கூட்டியே பயனாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் வரவு வைக்க தமிழக அரசு திட்டமிட்டு வருவதாகவும் இதுகுறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. தீபாவளி தினமான 12ம் தேதிக்கு முன்பே பயனாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் வரவு வைத்தால் தீபாவளி செலவுக்கு உதவும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே இம்மாதம் மட்டும் 10ம் தேதி அல்லது 11ம் தேதி அனைத்து பெண்களுக்கும் ஆயிரம் ரூபாய் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் அதற்கான ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. மகளிர் உரிமை திட்டத்தின் பயனாளிகளுக்கு இது சர்ப்ரைசாக உள்ளது.