பேட்மிண்டன் வீரர் மைதானத்திலேயே மரணம்

Filed under: இந்தியா,விளையாட்டு |

கேரளா வீரர் ஒருவர் ஓமன் நாட்டில் பேட்மிண்டன் விளையாடிகொண்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் சுருண்டு விழுந்து மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஓமன் நாட்டில் கேரளாவை சேர்ந்த பேட்மிட்டன் வீரர் ஒருவர் தனது நண்பர்களுடன் ஆடிக் கொண்டிருந்தபோது திடீரென கீழே விழுந்தார். சாதாரணமாகத்தான் விழுந்தார் என அவரது நண்பர்கள் இணைத்த போது அவருக்கு மாரடைப்பு வந்ததால் தான் மயங்கி விழுந்தார் என்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாரடைப்பில் உயிரிழந்த கேரள நபருக்கு 38 வயதில் மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருக்கிறார்கள்.