கல்லூரி மாணவிகளை பயன்படுத்தி பழுதாகி நின்ற பேருந்தை தள்ளிய வீடியோ இணையதளத்தில் வைரலானது. அப்பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் உள்பட நான்கு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
நாகர்கோவிலில் அரசு பேருந்தில் ஏராளமான கல்லூரி மாணவிகளும் பயணம் செய்தனர். திடீரென அந்த பேருந்து பழுதாகி நின்று விட்டது. இதனை அடுத்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் கல்லூரி மாணவிகளை இறங்கி தள்ள பயன்படுத்தியதாக தெரிகிறது. இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து போக்குவரத்து துறையின் பொது மேலாளர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். பழுதாகி நின்ற பேருந்தை தள்ளிய வீடியோ வைரலான நிலையில் ஓட்டுநர் நடத்துனர் உள்பட நான்கு பேர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.