பொதுத் தேர்வு தேதிகளில் மாற்றம் இல்லை அமைச்சர் தகவல்!

Filed under: அரசியல்,தமிழகம் |

ஏற்கனவே 10, 11, 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டது. அந்த தேதிகளை ஒட்டி நாடாளுமன்ற தேர்தல் தேதி வந்தால் பொது தேர்வு தேதிகள் மாற்றப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஷ், “10, 11, 12ம் வகுப்பு பொது தேர்வு தேதிகளில் மாற்றமில்லை. பொது தேர்வு பட்டியல் தேர்தல் ஆணையத்திடம் வழங்கப்பட்டு அதற்கு ஏற்றார் போல் தான் மக்களவைத் தேர்தல் தேதி இருக்கும். எனவே தமிழகம் உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் நடைபெறும் பொது தேர்வு தேர்தலை ஆய்வு செய்துதான் இந்த நாடாளுமன்ற தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கும். இதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே 10, 11, 12ம் வகுப்புக்கான தேர்வு தேதி மாற்றம் இருக்காது” என்று கூறியுள்ளார்.