“பொன்னியின் செல்வன் 1” திரைப்படக்குழு கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது.
இயக்குனர் மணிரத்னம் கல்கி எழுதிய பிரபல நாவலான பொன்னியின் செல்வனை திரைப்படமாக எடுத்துள்ளார். இப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பெரிய நடிகர் பட்டாளமே நடித்துள்ளனர். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் “பொன்னி நதி’’ என்ற பாடல் ரிலீஸானது. இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது. இது மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்பத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பு பற்றிய வீடியோ வைரலாகி வருகிறது.