போக்குவரத்துத்துறை நடத்துனர் மற்றும் ஓட்டுனரும் கட்டாயம் மாஸ்க் அணிவது அவசியம் என்று உத்தரவிட்டுள்ளது.
பேருந்துகளில் பணிபுரியும் நடத்துனர் மற்றும் ஓட்டுனர் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டுமென போக்குவரத்து துறை அறிவுறுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. பல ஊர்களில் மாஸ்க் கண்டிப்பாக அணிய வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, மாஸ்க் அணியாதவர்களிடம் 500 ரூபாய் அபராதம் பெறப்பட்டும் வருகிறது. இதையடுத்து பேருந்து ஓட்டுநர்கள் நடத்துநர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து பணிபுரிய வேண்டும் என்று போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.
பயணிகள் கண்டிப்பாக மாஸ்க் அணிந்து பயணம் செய்ய அறிவுறுத்த வேண்டும் எனவும் போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.