எம்.பி. ஜோதிமணி ராகுல் காந்தியை விசாரிக்கக்கூடாது என்று கூறி போராட்டம் செய்தததால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியிடம் கடந்த இரண்டு நாட்களாக நேஷனல் ஹெரால்டு வழக்கு சம்பந்தமாக அமலாக்கத்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். நேற்று 8.30 மணி நேரம் நடத்திய விசாரணை இன்றும் தொடர்ந்துள்ளது. இந்த விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் அலுவலகம் முன்பு தொண்டர்கள் போராட்டம் செய்து வருகின்றனர். அமலாக்கத்துறை அலுவலகம் பலத்த காவல் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது. ராகுல்காந்தியை விசாரிப்பதை எதிர்த்து எம்.பி. ஜோதிமணி தலைமையில் காங்கிரஸ் மகளிரணி அமலாக்கத்துறை அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். இதனால் போலீசார் ஜோதிமணி எம்.பி.யை கைது செய்தனர்.