“ஜெயம்” ரவி மற்றும் மோகன் ராஜா ஆகிய இருவரும் பணியாற்றிய படங்கள் ஒரே சமயத்தில் திரையரங்குகளில் ரிலீசாகி வெற்றி பெற்றுள்ளது. இதனால் இவர்களது பெற்றோர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Jayam Ravi, Raja @ Editor Mohan Thani Manithan Book Launch Stills
எடிட்டர் மோகனின் மகன்களாகிய மோகன் ராஜா மற்றும் ஜெயம் ரவி ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் வெற்றி பெற்றுள்ளதை அடுத்து அவருடைய பெற்றோர்களை பெருமைப்பட செய்துள்ளனர். ஜெயம் ரவி நடித்த “பொன்னியின் செல்வன்” திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. இப்படம் 400 கோடி ரூபாய் வசூலை நெருங்கி வருகிறது. இப்படத்தில் ஜெயம்ரவி ராஜராஜசோழன் கேரக்டரில் மிகச்சிறப்பாக நடித்திருந்தார். அதேபோல் மோகன்ராஜா இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவான “தி காட்பாதர்” திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. இப்படம் 3 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இந்நிலையில் சகோதரர்களாகிய மோகன் ராஜா மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் ஒரே நேரத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றதையடுத்து அவருடைய பெற்றோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.