மகராஷ்டிராவில் மூவாயிரம் காவல்துறையினர் கொரோனாவால் பாதிப்பு; 30 பேர் உயிரிழப்பு!

Filed under: இந்தியா |

உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவில் அதிகமாக பரவி வருகிறது. இந்த வைரஸால் இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலம் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை அந்மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட எண்ணிக்கை 80 ஆயிரத்துக்கும் மேல் மற்றும் பலியானோர் எண்ணிக்கை இரண்டு ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது.

அதில் சுமார் மூவாயிரம் காவல்துறை அதிகாரிகளுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது மற்றும் 30 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தெரிவித்துள்ளார்.

கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் காவல்துறை முன்னணியில் ஈடுபடுவதால் இந்த அளவு பாதிக்கப்பட்டுள்ளனார் என அவர் கூறினார். மேலும், 50 முதல் 55 வரை உள்ள 23 ஆயிரம் காவல்துறையினருக்கு பாதுகாப்பான இடங்களில் வேலை பார்க்கின்றனர் எனவும் மற்றும் 55 வயதுக்கு மேல் உள்ள 12 ஆயிரம் அதிகாரிகள் விடுமுறை அளித்து வீட்டிலேயே இருக்கும் படி தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

வீட்டில் இருக்கும் காவல்துறையினருக்கு முழு சம்பளம் வழங்கப்படுகிறது என அனில் தேஷ்முக் தெரிவித்துள்ளார்.