சீனாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்தும் மேல் – புதிய அதிர்ச்சியை கிளம்பும் தகவல்!

Filed under: உலகம் |

சீனாவில் உள்ள உகான் நகரில் இருந்து முதன் முதலில் கொரோனா வைரஸ் பரவியது. பிறகு அங்கிருந்து உலகம் முழுவதும் வேகமாக பரவி பல உயிர்களை எடுத்துள்ளது. இதனால் சீனாவில் கொரோனாவால் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். மேலும் இந்த வைரஸால் அமெரிக்காவில் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே சீனா தான் கொரோனா வைரஸை உருவாக்கியது, இதற்கு காரணம் சீனா தான் என அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. ஆனால் இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்தது.

இந்நிலையில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 6 லட்சத்து 40 ஆயிரம் என தேசிய பாதுகாப்பு தொழில்நுட்ப பல்கலைக்கழகம் இந்த தகவலை அறிவித்துள்ளது. இந்த தகவலை அறிந்த உலக நாடுகள் பெரும் அதிர்ச்சியில் உள்ளது.

இந்த தகவலை சீனாவில் இருக்கும் 230 நகரங்களில் உள்ள 100 தன்னார்வ பத்திரிகையாளர்கள் மூலம் மேற்கொண்ட ஆய்வுகளால் இந்த தகவல் சேகரிக்கப்பட்டுள்ளது.