சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் புதிய படமான “லால் சலாம்“ கவுரவ வேடத்தில் நடிக்கவுள்ளார்.
ஐஸ்வர்யா இயக்கும் புதிய படமான “லால் சலாம்” படத்தில் ரஜினிகாந்த் ஒரு கவுரவ வேடத்தில் நடிக்கிறார். இதுபற்றி தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் கதாநாயகன்களாக விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் நடிக்கின்றனர். ரஜினிகாந்த் கடைசியாக “குசேலன்” மற்றும் “ரா ஒன்” ஆகிய படங்களில் கவுரவ வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் பூஜையில் கலந்துகொண்ட ரஜினியிடம் படம் பற்றி பத்திரிக்கையாளர்கள் கேட்ட போது “நான் இந்த படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறேன்” எனக் கூறிவிட்டு சென்றுள்ளார்.