மங்கோலிய முன்னாள் அதிபர் “ஜெயிலர்” படத்திற்கு பாராட்டு

Filed under: உலகம்,சினிமா |

மங்கோலிய அதிபர் ரஜினியின் “ஜெயிலர்” திரைப்படத்தைப் பார்த்து பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “ஜெயிலர்.” படம் ஆகஸ்ட் 10ம் தேதி உலகம் முழுதும் உள்ள தியேட்டர்களில் ரிலீசானது. ரஜினியுடன் இணைந்து மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கிஷெராப், தமன்னா, ரம்யாகிருஷ்ணன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில், அனிருத் இசையில், சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த நிலையில் ஆகஸ்ட் 10ம் தேதி காலை 9 மணிக்கு வெளியான இப்படம், ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. ரஜினி ரசிகர்கள் இப்படத்தைக் கொண்டாடி வருகின்றனர். இப்படம் முதல் உலகம் முழுவதும் ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. படத்தைப் பார்த்த மங்கோலிய முன்னாள் அதிபர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தைப் பற்றி கூறும் போது, “இந்திய சினிமாக்கள் மங்கோலியர்களுக்கு பிடிக்கும். இப்படம் பார்த்தது எனக்கு ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. ஏனென்றால் இப்படத்தில் மிகப்பெரிய ஸ்டார் ரஜினிகாந்த் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். ரஜினி படம் வெளியாகியிருக்குன்னு தெரிஞ்சதும் இப்படத்தப் பார்த்தேன்’’ என்று கூறியுள்ளார்.