இன்று சென்னையில் நடிகர்கள் மஞ்சிமா மோகன் மற்றும் கௌதம் கார்த்திக் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.
இளம் நடிகர் கவுதம் கார்த்திக் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானவர். அதன் பின், “இவன் தந்திரன்,” “தேவராட்டம்,” “இருட்டு அறையில் முரட்டுக் குத்து,” “ஆனந்தம் விளையாடும் வீடு” உட்பட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் “அச்சம் என்பது மடமையடா” படத்தில் நடித்த நடிகை மஞ்சிமா மோகனை காதலிப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் சமீபத்தில் இருவருமே அந்த தகவலை உறுதி செய்தனர். இன்று சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இது சம்மந்தமான மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை- இருவரும் சமூகவலைதளங்களில் வெளியிட இது தற்போது வைரலாகி உள்ளது.