மீண்டும் இந்த இயக்குனருடன் நடிகர் கார்த்திக் இணைகிறார் – அசத்தலான வெற்றி கூட்டணி!

Filed under: சினிமா |

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகன் நடிகர் கார்த்திக். தற்போது கார்த்திக் ரெமோ படத்தை இயக்கிய பாக்யராஜ் இயக்கத்தில் சுல்தான் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தன்னா கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் கார்த்திக் சுல்தான் மற்றும் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதையடுத்து இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கு முன்பே இயக்குனர் முத்தையாவும் மற்றும் நடிகர் கார்த்தியும் இணைந்த படம் தான் “கொம்பன்”. இந்தப் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.