மதுரை – போடிக்கு ரயில் சேவை தொடக்கம்!

Filed under: தமிழகம் |

இன்று முதல் 14 ஆண்டுகளுக்கு பின் மதுரையிலிருந்து போடிக்கு மீண்டும் ரயில் இயக்கப்படுவதையடுத்து அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைகின்றனர்.

மதுரையிலிருந்து போடிக்கு கடந்த 2010ம் ஆண்டு மீட்டர் கேஜ் ரயில் சேவை நிறுத்தப்பட்டதையடுத்து வழித்தடம் நிறுத்தப்பட்டது. கடந்தாண்டு மதுரை முதல் தேனி வரை அகல ரயில் பாதையாக மாற்றுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டது. இந்த பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று முதல் மதுரையிலிருந்து போடி ரயில் இயக்கப்படவுள்ளது. இதற்கான வெள்ளோட்டம் நேற்று நடந்தது என்பதும் மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் ரயில் சோதனை செய்து பார்த்ததில் வெற்றிகரமாக ரயில் பயணம் செய்தது. இன்று முதல் பயணிகளுக்காக மதுரையிலிருந்து போடி ரயில் சேவை இயக்கப்படுகிறது. மதுரையிலிருந்து தினமும் காலை 8:20 மணிக்கு புறப்பட்டு 10:30 மணிக்கு போடியை சென்றடையும். அதேபோல் மாலை 5:50 மணிக்கு போடியில் இருந்து புறப்பட்டு 7:50 மணிக்கு மதுரைக்கு சென்றடையும். அதேபோல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் போடிக்கு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் இரவு 7.15 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 9.35 மணிக்கு போடியை சென்றடையும். அதேபோல் மறுமார்க்கத்தில் இந்த ரயில் இரவு 8.30 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 7.55 மணிக்கு சென்னை சென்றடையும்.