தெற்கு ரயில்வே மதுரை கோவை ரயில் சேவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வேத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை ரயில்வே கோட்டத்தில் போத்தனூர் ரயில் நிலைய பாலத்தில் இரும்பு கர்டர்களை மாற்றும் பணிகள் நடந்து வருகிறது. எனவே ஏப்ரல் 30-ம் தேதி வரை ரயில் சேவைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி மதியம் 12.15 மணிக்கு கோவை சென்றடையும் மதுரை – கோவை ரயில் இந்த இரண்டு நாட்களும் மதுரையிலிருந்து போத்தனூர் வரை மட்டுமே இயக்கப்படும் போத்தனூர் – கோவை இடையே ரத்து செய்யப்படும். அதேபோல் கோவை ரயில் நிலையத்திலிருந்து மதியம் 2.40 மணிக்கு புறப்படும் கோவை-மதுரை ரயில் இரண்டு நாட்களுக்கு கோவைக்கு பதிலாக போத்தனூரில் இருந்து மதியம் 2.52 மணிக்கு புறப்படும். இவ்வாறு தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
Related posts:
கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் ஆய்வு.
ஆசிரியர்களுக்கு மனமார்ந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் - தமிழக பா.ஜ.க தலைவர் டாக்டர் எல்.முருகன்!
கேரளா ஸ்டோரி குறித்து தமிழக அரசு பதில்!
முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றியின் உடல் 8 நாட்களுக்கு பிறகு மீட்பு!



