மளிகை பொருட்கள் விலை கடும் உயர்வு!

Filed under: தமிழகம் |

தமிழகத்தில் சமீப காலமாக தக்காளி விலை கடும் விலை உயர்ந்து கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் மளிகை பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருவது தற்போது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு கிலோ சீரகம் 300 ரூபாய் என விற்பனையானது. ஆனால், தற்போது 400 ரூபாய் உயர்ந்து 700 என விற்பனையாகி வருகிறது. ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.160 என்றும், புளி 200 ரூபாய் என்றும், உளுத்தம் பருப்பு ரூ.150 என்றும் பாசிப்பருப்பு ரூ.110 என்றும் விற்பனையாகி வருகிறது. அதேபோல் இஞ்சி பூண்டு சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவையும் விலையும் அதிகமாக உயர்ந்துள்ளது. தக்காளி ஒரு கிலோ 150 என விற்பனையாகி வருகிறது. மளிகை பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளதால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து அத்தியாவசிய பொருட்களான காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் விலையை கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டு வருகிறது.