ஒன்பது தமிழக மீனவர்களை மீட்ட மியான்மர் கடற்படையினருக்கு நன்றி – அமைச்சர் ஜெயக்குமார்!

Filed under: தமிழகம் |

வங்ககடலின் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்று திசைமாறி காணாமல் போன ஒன்பது தமிழக மீனவர்களை மீட்டுக்கொடுத்த மியான்மர் கடற்படையினருக்கு தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நன்றியை தெரிவித்துள்ளார்.

இதை பற்றி அவரின் ட்விட்டர் பதிவில்; சென்னையை சேர்ந்த ஒன்பது மீனவர்களை தாய் நாட்டுக்கு கொண்டு வர, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கும் மற்றும் மியான்மரில் உள்ள இந்திய தூதரகத்துக்கு அமைச்சர் ஜெயகுமார் கேட்டு கொண்டதாக தெரிவித்து இருந்தார்.

கடந்த ஜூலை மாதம் 27ஆம் தேதி ஆழ்கடலில் காணாமல் போன ஒன்பது மீனவர்கள், 55 தினங்களுக்கு பின்பு மியான்மர் நாட்டின் கடற்படையினர் அவர்களை மீட்டதற்கு நன்றி என தெரிவித்துள்ளார்.