கர்நாடக மாநிலத்தில் மாதம் 2000 ரூபாய் குடும்பத் தலைவிகளுக்கு வழங்கும் திட்டத்தை அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா தொடங்கி வைத்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிவந்த போது அக்கட்சி கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றான குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 2000 வழங்கும் கிரகலட்சுமி திட்டத்தை தொடங்குவதற்கான ஏற்பாடுகள் கடந்து சில நாட்களாக நடந்து வந்தது. கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா இன்று இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இதனையடுத்து விரைவில் அம்மாநிலத்தில் உள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 2000 கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.