ஹரியானா மாநிலத்தில் ரோக்தக் நகரில் இன்று மதியம் 12.58 மணி அளவில் சிறிய நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. அதன் ரிக்டர் அளவு 2.8 ஆக பதிவாகியுள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் கூறியுள்ளது.
இதனால் உயிர் சேதங்களை மற்றும் காயமடைந்தவர்கள் பற்றிய தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. சில நாட்களாக இந்தியாவில் வட பகுதிகளில் தொடர்ந்து நில அதிர்வு ஏற்பட்டு வருகிறது.
மகாராஷ்டிரா அகோலா நகரில் நேற்று மாலை 3.3 ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து வடகிழக்கு பகுதியான மிசோரம், ஒடிசா மற்றும் சத்தீஷ்காரில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. சத்தீஷ்காரில் 3.6 ரிக்டர் அளவு பதிவாகியுள்ளது.