நேபாளத்தில் விமான நிலையத்திலிருந்து கிளம்பிய விமானம் திடீரென காணாமல் போனது. ஆனால் அவ்விமானம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இன்று காலை 9 மணிக்கு நேபாளத்தில் இருந்து கிளம்பிய விமானத்தில் 19 பயணிகள் மற்றும் மூன்று ஊழியர்கள் இருந்துள்ளனர். இவ்விமானம் கிளம்பிய ஒரு சில நிமிடங்களிலேயே தொடர்பு கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதையடுத்து இவ்விமானத்தை தேடும் பணி நடைபெற்று வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் சற்று முன் நேபாளத்தில் மாஸ்டாங் அருகே கோவாங் என்ற பகுதியில் மாயமான விமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மீட்புக் குழுவினர் விமானம் இருக்கும் பகுதியை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. விமானத்தின் முழுமையான நிலைமை குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை என சர்வதேச விமான நிலைய தலைவர் தெரிவித்துள்ளார்.