இந்திய கடற்படையின் கடற்படைக்கு சொந்தமான பவர் கிளைடர் விமானம் பயிற்சியின் பயிற்சியின் போது விபத்துக்குள்ளாகியதில் இரண்டு அதிகாரிகள் உயிரிழந்தனர்.
கேரளா மாநிலத்தின் கொச்சியில் உள்ள கடற்படை விமான நிலையம் அருகில், பயிற்சியினை மேற்கொண்டிருந்த இந்திய கடற்படைக்கு சொந்தமான விமானம் மட்டாஞ்சேரி பாலத்துக்கு எதிர்ப்புறத்தில் விபத்து ஏற்பட்டு விழுந்து நொறுங்கியது.
இந்த சம்பவத்தை பற்றி தகவல் அறிந்த வந்த மீட்பு வீரர்கள், லெப்டினன்ட் ராஜீவ் ஜா, மற்றும் சுனில் குமார் ஆகிய இரண்டு அதிகாரிகளையும் ஐஎன்எஸ் சஞ்சீவனி ராணுவ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால், இருவரும் பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.