இன்று மாலை “மாவீரன்’’ திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
“மண்டேலா” திரைப்படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் “மாவீரன்” படம் உருவாகி உள்ளது. இயக்கி வருகிறார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு (மாவீருடு) மொழியில் தயாராகி வருகிறது. படத்தில், அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின், யோகிபாபு உள்ளிடோர் நடித்துள்ளனர். கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடந்து வந்த படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இப்போது இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. “மாவீரன்” திரைப்படத்தின் டப்பிங் பணிகளை சிவகார்த்திகேயன் நிறைவு செய்த புகைப்படத்தைப் பதிவிட்டிருந்தார். இப்படத்தின் புதிய அப்டேட் இன்று மாலை மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. “மாவீரன்” படம் வரும் ஜூலை மாதம் 14ம் தேதி தியேட்டர்களில் வெளியாகவுள்ளது.