புதுவை அரசு மின்சாரத்துறையை தனியார்மயமாக்க திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மின்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுவையில் மின்சாரத் துறை தனியார் மயமாக்க ஒப்பந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மின்சார துறை ஊழியர்கள் இன்று முதல் தங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதனால் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் மின்சார துறை தனியார்மயம் ஆக்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்ததை அடுத்து மின்சாரத்தை ஊழியர்கள் போராட்டம் நடத்தினார். இதையடுத்து பேச்சுவார்த்தை நடத்தப் பட்ட நிலையில் மின்சார துறையை தனியார் மயமாக்குவது குறித்த கருத்து கேட்பு நடத்தி அதன் பிறகு முடிவு எடுக்கப்படும் என்று கூறப்பட்டது. நேற்று திடீரென மின்சாரத்துறை தனியார்மயம் ஆக்குவதற்கான ஒப்பந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில் புதுவையை சேர்ந்த மின்சார தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெறும் என்று ஊழியர்கள் கூறியிருப்பதால் மின்சாரத்துறை பணிகள் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.