சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவிற்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே கடந்த 19ம் தேதி சசிகலாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதன்பிறகு சசிகலாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து கடந்த 27ஆம் தேதி சசிகலா தண்டனை காலம் முடிந்து விடுதலை செய்யப்பட்டார்.
இந்நிலையில், ஆறு நாட்களுக்குப் பிறகு சசிகலாவிற்கு மீண்டும் ரத்த அழுத்தம் அதிகரித்திருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. உடல்நிலை சீராக உள்ளதாகவும், சிகிச்சைக்காக ஒத்துழைப்பு அளிப்பதாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையில், தற்போது சசிகலாவுக்கு சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் அதிகரித்திருப்பதாக மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது.