இலங்கை கடபடையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களையும், அவரது படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை தமிழர்களுக்கு அரிசி, பருப்பு, உயிர் காக்கும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை கப்பல் மூலம் அனுப்ப தமிழ்நாடு தயாராக உள்ளது என்றும் தெரிவித்தள்ளார்.
மேலும் இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு உதவ முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகம் அத்தியாவசிய பொருட்களை இலங்கை தமிழர்களுக்கு அனுப்ப அனுமதி தர வேண்டும் எனவும் ஒன்றிய அமைச்சர் ஜெயசங்கரிடம் வலியுறுத்தியுள்ளார்.
ஏற்கனவே பிரதமரிடம் கோரிக்கை வைத்த நிலையில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கரை தொலைபேசியில் தொடர்புகொண்டு வலியுறுத்தியுள்ளார்.