தமிழகம் முழுதும் கொரோனா நோய் தொற்று பரவாமல் இருக்க இனி முழு நேரமும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். அலுவலகங்களில் பணிக்கு வருபவர்கள் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என்று உத்தரவிட்டு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்புகள் குறைந்து வந்த நிலையில் மாஸ்க் அணிவது, சமூக இடைவெளி பின்பற்றுதல் உள்ளிட்ட கொரோனா விதிமுறைகளில் தளர்வு செய்யப்பட்டிருந்தது. கடந்த சில காலமாக மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. நீண்ட நாட்களுக்கு பின் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,500ஐ நெருங்கியுள்ளது. இதனால் மீண்டும் கொரோனா விதிமுறைகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி நேற்று முன்தினம் முதல் தமிழகம் முழுவதும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்போது சுகாதாரத்துறை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அறிக்கையில், அலுவலகத்தில் அனைவரும் முழு நேரமும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.