மக்கள் அனைவரும் மூன்று அடுக்கு கொண்ட முகக்கவசம் அணிய வேண்டும் – உலக சுகாதார அமைப்பு புதிய வழிகாட்டு!

Filed under: உலகம் |

சினாவில் உள்ள உகான் நகரில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளில் பெரும் பாதிப்பை எற்படுத்தி வருகிறது. இதனால், அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி,பிரேசில், ஸ்பெயின், இந்தியா போன்ற நாடுகள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வைரசால் உலகம் முழுவதும் 70லட்சத்துக்கும்மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது பற்றி உலக சுகாதார அமைப்பு புதிய வழிகாட்டுதல்களை தெரிவித்துள்ளது. புதிய ஆராய்ச்சியின் பேரில் முகக்கவசத்தில் மூன்று அடுக்குகள் கொண்டிருக்க வேண்டும்.

60 வயதுக்கு மேல் இருப்பவர்கள் அல்லது உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் சமூக இடைவெளி கடைப்பிடிக்காத பகுதிகளில் மருத்துவ முகக்கவசம் அணிய வேண்டும்.

அந்த முகக்கவசங்களை கைகளை மூலம் சரி செய்வது மற்றும் அடிக்கடி கழற்றி மாற்றக் கூடாது. இதனை போல் செய்தால் மக்கள் தாங்களே வைரஸை பரப்பிக்கொள்வீர்கள் என்பதை நினைவு கொள்ள வேண்டும்.

கொரோனாவை தடுப்பதற்கு மக்கள் அனைவரும் பொது இடங்களில் மூன்று அடுக்கு கொண்ட துணி முகக்கவசங்களை அணிய வேண்டும்.

இவ்வாறு உலக சுகாதார அமைப்பு குறிப்பிடப்பட்டுள்ளது.