முக்கிய வீரர்களின் ஐபிஎல் மினி ஏலம் இன்று நடைபெற்று வருகிறது. முக்கிய வீரர்களின் ஏலத்தொகை என்ன? என்பதற்கான விபரங்கள் இதோ…
அமித் மிஸ்ராவை அடிப்படை விலையான 50 லட்சத்துக்கு, லக்னோ அணியும், பியூஷ் சாவ்லாவை அடிப்படை விலையான 50 லட்சத்துக்கு, மும்பை அணியும், இங்கிலாந்து வீரர் சாம் கரன் ரூ.18.5. கோடிக்கு ஏலம்.- மேலும் நியூசிலாந்து வீரர் கைல் ஜேமிசன்னை அடிப்படை விலையான 1 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி! நியூசிலாந்து வீரர் ஜிம்மி நீஷம்மை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. முதல் சுற்று ஏலத்தில், ஆஸ்திரேலிய வீரர் ட்ராவிஸ் ஹெட்டை, எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. இங்கிலாந்து வீரர் வில் ஜேக்கை 3.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது பெங்களூரு அணி! முதல் சுற்று ஏலத்தில், தென்னாப்பிரிக்க வீரர் ரசி வான் டர் டூசனை, எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. இந்திய வீரர் மணிஷ் பாண்டேவை, 2.4 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது டெல்லி அணி! மேற்கு வங்கத்தை சேர்ந்த வீரர் முகேஷ் குமாரை, 5.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது டெல்லி அணி.