ரூபாய் 284 கோடி சம்பளம் வாங்கும் டென்னிஸ் வீராங்கனை – புதிய சாதனை!

Filed under: விளையாட்டு |

ஜப்பான் டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகா. இவர் உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீராங்கனை என புதிய சாதனை படைத்துள்ளார். 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் செரீனா வில்லியம்சை எதிர் கொண்டார். அந்தப் போட்டியில் சாம்பியன் பட்டத்தை பெற்ற நவோமி ஒசாகா உலகம் முழுவதும் பிரபலம் அடைந்தார்.

சென்ற ஆண்டு மட்டும் இந்திய பண மதிப்பில் 284 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார். 2015 ஆம் ஆண்டு 225 கோடி ரூபாய் சம்பளம் பெற்ற தடகள வீரர் மரியா ஷரபோவாவின் சாதனையை முறியடித்துள்ளார்.

இதனிடையே நைக் உள்பட 15 நிறுவனங்களுக்கு நவோமி ஒசக்கா விளம்பரம் ஒப்பந்தம் செய்துள்ளார் என கூறப்படுகிறது.