வருகின்ற மார்ச் 1ம் தேதியன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் கொண்டாட இருப்பதால் அன்றைய தினத்தில் பிரம்மாண்டமான கூட்டம் நடைபெற உள்ளதாகவும், அக்கூட்டத்தில் தேசிய தலைவர்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும் திமுகவின் பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
மார்ச் 1ம் தேதியன்று நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டிமாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இப்பொதுக்கூட்டத்தில் இந்தியாவின் முக்கிய தலைவர்களான காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாகவும் பிரம்மாண்டமாக நடைபெறும் இந்த பொதுக்கூட்டத்திற்கு தொண்டர்கள் திரளாக வந்திருந்து சிறப்பிக்க வேண்டும் என்றும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கேட்டுக் கொண்டுள்ளார்.