வாட்ஸ் அப் நிர்வாகம் இந்தியாவில் கடந்த நவம்பர் மாதம் மட்டும் 71 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

வாட்ஸ் அப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை உலகம் முழுதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மெசேஜ்கள் புகைப்படங்கள் வீடியோக்கள் பகிர்வு மட்டும் இன்றி பண பரிவர்த்தனை வசதியும் தற்போது இதில் உள்ளது. அதேபோல் ஆடியோ கால் வீடியோ கால் வசதியும் உள்ளது. இந்தியாவில் கடந்த நவம்பர் மாதம் மட்டும் 71 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகளுக்கு தடை விதித்துள்ளதாக மெட்டா நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. ஆபத்து ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் தான் 71 லட்சம் கணக்குகளுக்கு விதிக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மேலும் பயனர்களிடமிருந்து பெறப்பட்ட 8,841 புகார்களுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் மெட்டா நிர்வாகம் கூறியுள்ளது.
Related posts:
மழைக்கால மருத்துவ முகாம் மூலம் நாள்தோறும் 1 லட்சம் பேருக்கு பரிசோதனை, சிகிச்சை: சுகாதாரத்துறை அமை...
தன் இன்னுயிரை இழக்கும் தருணத்திலும், பிஞ்சு உயிர்களைக் காப்பாற்றிய ஓட்டுநர் சேமலையப்பன் வீட்டிற்கு ...
12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து தேனி போக்சோ சிறப்பு...
இளைஞர்கள் வேலைவாய்ப்பு, தொழிலாளர்கள் காப்பீடு குறித்து நாடாளுமன்றத்தில் புதிய அறிவிப்புகள்



