தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடியில் ஆய்வு செய்து வருகிறார். அந்தோணியார்புரம் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளை முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டறிந்தார். அதன்பின் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி சென்றடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை பார்வையிடுகிறார். பின்னர் மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக திருநெல்வேலி, தூத்துக்குடி உள்பட நான்கு மாவட்டங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கனமழை பெய்தது அடுத்து ஏராளமான சேதம் ஏற்பட்டது. வெள்ளப்பெருக்கில் ஆடு மாடுகள் கோழிகள் என பொதுமக்களின் வாழ்வாதாரத்திற்கு காரணமாக இருந்த விலங்குகள் அடித்து செல்லப்பட்டன. அதுமட்டுமின்றி கடைகளுக்குள் நீர் புகுந்ததால் ஏராளமான நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதற்கு அரசு தான் நிவாரண உதவி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்க உள்ளனர்.