சோனியா காந்தி ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
வரும் 27ம் தேதி 15 மாநிலங்களில் காலியாக உள்ள 56 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ் முதல் தலைவர் சோனியா காந்தி, ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு போட்டியிடுவார் என காங்கிரஸ் கட்சி அறிவித்தது. இதையடுத்து கடந்த 14ம் தேதி ஜெய்ப்பூரில் தனது வேட்புமனுவை சோனியா காந்தி தாக்கல் செய்தார். ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக சோனியா காந்தி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை ராஜஸ்தான் சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது. ஐந்து முறை மக்களவை உறுப்பினராக பணியாற்றிய சோனியா காந்தி, முதல் முறையாக மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 1964 ஆக. முதல் 1967 பிப். வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி. அதன் பின் காந்தி குடும்பத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக நுழைய இருப்பவர் சோனியா காந்தி ஆவார்.