உத்தரபிரதேசம் மாநிலத்தில் முன்னாள் பா.ஜ.க மாவட்டத் தலைவர் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை!

Filed under: இந்தியா |

உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பக்பத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சஞ்சய் கொக்கார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவராக பதவியில் இருந்துள்ளார்.

இன்று காலை சஞ்சய் அவருடைய வீட்டு பக்கத்தில் இருக்கும் போது பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் அவரை சுட்டுக் கொன்றுவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.

அந்தத் துப்பாக்கிக் குண்டுகள் சஞ்சயன் தலை மற்றும் நெஞ்சில் பாய்ந்ததால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சஞ்சய் கொக்கார் கொல்லப்பட்டதற்கு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வருத்தம் தெரிவித்துள்ளார் மற்றும் குற்றவாளிகளை கைது செய்ய விசாரணைக்கு உத்தரவிட்டார்.

மேலும், கடந்த சில நாட்களாக பா.ஜ.க பிரமுகரை குறித்து வைத்து கொலைகள் நடந்து வருகிறது.