ஏற்கனவே இரண்டு முறை நடிகை சமந்தாவின் “சாகுந்தலம்” திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பின்னர் தள்ளிவைக்கப்பட்டது. தற்போது மூன்றாவது முறையாக ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சரித்திர திரைப்படமான சமந்தா நடித்த “சாகுந்தலம்” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்ட கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இப்படம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியாகுமென்றும் அதன் பின் பிப்ரவரி 17ம் தேதி வெளியாகும் என்றும் கூறப்பட்டது. சமீபத்தில் இத்திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ஏப்ரல் 14-ம் தேதி இந்த படம் வெளியாகுமென மீண்டும் அதிகாரப்பூர்வமாக ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது அறிவிக்கப்பட்ட தேதியிலாவது படம் வெளியாகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். சமந்தா, மோகன்பாபு, அதிதி பாலன், பிரகாஷ்ராஜ், கௌதமி, கபீர் சிங் உட்பட பலரும் நடித்துள்ள இத்திரைப்படத்தை குணசேகர் இயக்கியுள்ளார். மணிசர்மா படத்திற்கு இசையமைத்துள்ளார்.