நடிகர் ஜெய்க்கு கதாநாயகியாக நடிக்கும் செய்தி வாசிப்பாளர் – இதோ அவரின் புகைப்படம்!

Filed under: சினிமா |

நடிகர் ஜெய் தளபதி விஜய்க்கு தம்பியாக பகவதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். இதனைத் தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.

சுப்பிரமணியபுரம், கோவா, ராஜா ராணி ஆகிய படங்களில் மூலம் அவருடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். இதன் அடுத்து சமீபத்தில் எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கத்தில் கேப்மாரி என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணத்தினால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவை தளர்வு செய்த பின் படப்பிடிப்புகள் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர் பாரதிராஜா நடிக்கும் படத்தில் கதாநாயகனாக ஜெய் நடிக்க உள்ளார். இவருக்கு ஜோடியாக செய்தி வாசிப்பாளர் திவ்யா துரைசாமி நடிக்க உள்ளார். இவர் இதற்கு முன்பு ஹரிஷ் கல்யாண் நடித்த இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.