செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் கோட்டம் பல்லாவரம், அஸ்தினாபுரம், சேலையூர் உட்பட்ட பகுதிகளில் இன்று (26.09.2021) நடைப்பெற்று வரும் மாபெரும் மூன்றாவது தடுப்பூசி முகாமை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பல்லாவரம் நகராட்சியில் உள்ள நெமிலிச்சேரி ஏரியில் படர்ந்து இருந்த ஆகாய தாமரை அகற்றும் பணி மற்றும் ஏரியினை ஆழப்படுத்தி கரையை பலம்படுத்தும் பணியினை பார்வையிட்டார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்த மக்கள் தொகையானது 24.57 லட்சம் ஆகும். இதில் 18 வயதிற்கு மேற்ப்பட்டோர் 19.16 லட்சம் உள்ளனர். இதில் முதல் தவனை கோவிட் 19 தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் 10.88 லட்சம் இரண்டாம் தவனை கோவிட் 19 தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் 4 லட்சம் ஆகும். செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் 485 முகாம்களும் நகர்புர பகுதிகளில் 119 முகாம்கள் என மொத்தம் 604 தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகிறது. இம்முகாமில் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் நோக்கில் 4500 மேற்ப்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், மற்றும் அரசு பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். பொது மக்கள் அனைவரும் முகாம்களில் தடுப்பூசி செலுத்திட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்.
இன்நிகழ்வில் தமிழ்நாடு அரசு பொது துறை செயலாளர் ஜகநாதன் இ.ஆ.ப., செங்கல்பட்டு மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/ வேளாண்மை – ஊழவர் நலத்துறை அரசு செயலாளர் சமயமூர்த்தி இ.ஆ.ப., செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ராகுல் நாத் இ.ஆ.ப., மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.