சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்ட பணிகளில் சுரங்கம் தோண்டும் பணிகள் விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
சென்னையின் பல இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் மூன்று ஆண்டுகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணியில் கோயம்பேடு முதல் மாதம் வரை 10.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு இரும்புப் பாதை அமைக்க ரூபாய் 206.64 கோடி மதிப்பில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த தகவலை சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து வெகு விரைவில் சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பயணிகளுக்காக இயக்கப்படும் என்று கூறப்படுகிறது.