இயக்குனர் பிரேம் குமார் “96” வெற்றிப்படத்தை கொடுத்தவர். அவர் தற்போது கார்த்தி நடிப்பில் ஒரு படத்தை இயக்க சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் அதை தயாரிக்கிறது. கிராமத்து பின்னணியில் உருவாகும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் அரவிந்த்சாமி நடிக்கிறார்.
கடந்த ஆண்டு இறுதியில் இப்படத்தின் ஷூட்டிங் கும்பகோணத்தில் தொடங்கியது. இந்த படத்துக்காக தன்னுடைய கெட்டப்பை மாற்றி நடித்தார் கார்த்தி. படத்தில் கதாநாயகியாக பிரபல சீரியல் நடிகை ஸ்வாதி மற்றும் ஸ்ரீதிவ்யா ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு “மெய்யழகன்” என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. தற்போது இப்படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. இப்படம் ஆகஸ்ட் மாதத்தில் ரிலீசாக உள்ளதாக படக்குழு வட்டாரத்தில் கூறப்படுகிறது.