அமலாக்கத்துறை சூப்பர் ஸ்டார் நடிகர் மோகன் லாலுக்கு சம்மன் அனுப்பியுள்ளதால் கேரள மாநிலத்தில் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மோன்சன் மாவுங்கல் கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்தவர். புராதன பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிறுவனத்திற்கு சினிமா பிரபலங்கள் வந்து செல்வது வழக்கம். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் மோகன்லால், உட்பட பலரும் அவரிடம் பழங்காலப் பொருட்கள் வாங்கியுள்ளனர். மோன்சன் மாவுங்கலிடம் புராதன பொருள் வாங்கிய ஒருவர் அவர் தன்னை ஏமாற்றி விட்டதாக புகார் கூறினார். இதுதொடர்பாக போலீசார் மாவுங்கல் மீது வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மாவுங்கல் நிறுவனத்திற்கு வந்து சென்ற மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் மோகன்லால் உட்பட பல பிரபலங்களிடமும் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். எனவே மத்திய அமலாக்கத்துறையினர் நடிகர் மோகன்லாலுக்கு இது தொடர்பாக சம்மன் அனுப்பியுள்ளனர். மேலும், அடுத்த வாரம் அமலாக்கத்துறையினர் விசாரணைக்கு ஆஜராகும்படி தெரிவித்துள்ளனர். இது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.