ஆஸ்திரேலிய பிரதமர் “இந்திய பிரதமர் மோடிதான் எனது பாஸ்” என்று கூறியிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போது பிரதமர் மோடி ஜப்பான் மற்றும் நியூ கினியா நாட்டிற்கு பயணம் செய்துள்ளார். நேற்றிரவு ஆஸ்திரேலியா தலைநகர் சிட்னி சென்றார். அவரை ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பானி என்பவர் வரவேற்ற நிலையில் இருவரும் சிட்னியில் நடந்த -பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்திய பிரதமர் மோடி மேடை ஏறியதும் அங்கு கூடி இருந்தவர்கள் மோடி மோடி என கரகோஷமிட்டதால் அரங்கமே அதிர்ந்தது. அதை பார்த்து ஆஸ்திரேலிய பிரதமர் வியந்து போனார். இதையடுத்து ஆஸ்திரேலியா பிரதமர் பேசிய போது “இந்திய பிரதமர் மோடி தான் எனது பாஸ். ஒரு வருடத்திற்கு முன் நான் பிரதமராக பதவியேற்றதிலிருந்து நான் ஆறாவது முறையாக அவரை சந்தித்துள்ளேன். இந்தியாவிற்கு ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான உறவு மிகவும் முக்கியமானது என்பதை காட்டுகிறது. உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா வளரும். இந்தியா உலகளவில் பிரபலமான நாடாக இருக்கிறது” என்று அவர் தெரிவித்தார்.