நாளை இளைஞர் நலத்துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்திக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
ஓரிரண்டு நாட்கள் பயணமாக டில்லி சென்றுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை பிரதமர் மோடியை சந்திக்க இருப்பதாகவும் இந்த சந்திப்பின்போது விளையாட்டு துறையை மேம்பாடுவதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்துவதாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின் முதல்முறையாக டில்லி சென்றுள்ளார். பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்க அவர் டில்லி சென்றுள்ளதாகவும் அதன் பின்னர் அவர் நாளை பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் கேட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. பிரதமரை சந்திக்க அனுமதி கிடைத்தால் நீட் தேர்வு விலக்கு குறித்த கோரிக்கை வைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாகூர் உள்பட ஒரு சிலரையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.