ஆசிரியர்களுக்கு மனமார்ந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் – தமிழக பா.ஜ.க தலைவர் டாக்டர் எல்.முருகன்!

Filed under: தமிழகம் |

ஆசிரியர்களுக்கு மனமார்ந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் என தமிழக பாஜக தலைவர் டாக்டர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

அவருடைய வாழ்த்து செய்தியில்; நல்லாசிரியராக தமது இறுதி காலம் வரை வாழ்ந்து காட்டிய தத்துவ மேதை டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளை செப்டம்பர் 5ம் தேதி நம் தேசத்தில் ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறோம். மாதா, பிதா, குரு, தெய்வம் என்பார்கள். அவ்வகையில் சமூகத்திற்கு கல்வியை வழங்கும் ஆசிரியர்களை ஒப்பந்த நிலையில் வைத்து போற்றி வருகிறோம்.

தேசிய கல்விக் கொள்கை 2020 ஜ முழுமையாக செயல்படுத்தி நம் நாட்டு மாணவச் செல்வங்களை உலக அளவில் உயர்த்தும் பெரும் பொறுப்பு தம் ஆசிரியர் கையில் தான் இருக்கிறது. நம் மாணவர்களின் கல்வி ஆற்றல் உலகின் உயர்ந்த நிலையை அடைந்திட, மேம்பட்டிட நம் ஆசிரிய பெருமக்கள் அனைவரும் ஒத்துழைத்து உதவிட வேண்டும்.

அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் என் மனமார்ந்த ஆசிரியர் தின வாழ்த்துக்களை எனது சார்பிலும் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பிலும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு தமிழக பா.ஜ.க தலைவர் டாக்டர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.