மோடியை புகழ்ந்த காங்கிரஸ் முதலமைச்சர்!

Filed under: அரசியல்,இந்தியா |

ராஜஸ்தான் மாநிலத்தின் காங்கிரஸ் முதலமைச்சர் அசோக் கெலாட் பிரதமர் மோடியை புகழ்ந்துள்ளார்.

இந்திய சுதந்திரத்திற்கு பின் காங்கிரசுக்கும், பாஜக கட்சிக்கும்தான் பொதுத்தேர்தலில் பலத்த போட்டி ஏற்பட்டு வந்தது. மோடி பிரதமராகப் பதவியேற்றது முதல் பாஜக கட்சி அடுத்தடுத்த நடந்த சட்டசபைத் தேர்தல்களிலும் பெருமளவு வெற்றி பெற்றது. தற்போது, இந்தியாவில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் 2தான்! ஆனால், பாஜக 123 மாநிலங்களில் ஆட்சி செய்து வருகிறது. சமீபத்தில், காங்கிரஸ் தலைவராக கார்க்கே தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் அக்கட்சி மீண்டும் எழுச்சி பெரும் என கூறப்படுகிறது. இந்நிலையில், ராஜஸ்தானில் கடந்த 1913ம் ஆண்டு நடந்த மங்கார் படுகொலையை நினைவுகூறும் விதமாக மங்கார் தம் கி கவுரவ் நிகழ்ச்சி பன்ஸ்வாராவில் நடந்தது. இதில், அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் பிரதமர் மோடி உட்பட பலரும் கலந்து கொண்டனர். இதில்,பேசிய முதலமைச்சர் அசோக் கெலாட், “காந்தி தேசத்தில் பிரதமராக உள்ள பிரதமர் மோடிக்கு, வெளி நாடுகளுக்கு செல்லும்போது சிறந்த மரியாதை அளிக்கப்படுகிறது. இங்கிருந்து ஒரு பிரதமர் வருவதை அவர்கள் பெருமையாக உணர்கின்றனர்’’ என்று புகழ்ந்துள்ளார். இது காங்கிரஸ் கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.