‘மோடி’ மாம்பழம் காஸ்ட்லியா?!

Filed under: இந்தியா |

உபேந்திரா சிங் என்பவர் கண்டுபிடித்த பிரதமர் பெயரிலான மாம்பழம் விரைவில் உத்தரபிரதேசத்திலிருந்து இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பழங்கள், காய்கறிகளில் ஒன்றுடன் ஒன்றை இணைத்து ஆய்வு செய்து பல புதிய ரகங்களை வேளாண் ஆய்வாளர்கள் வெளியிட்டு வருகின்றனர். அவ்வாறாக உத்தர பிரதேசத்தை சேர்ந்த உபேந்திரா சிங் என்பவர் அப்பகுதியில் விளையும் புகழ்பெற்ற துஸ்ஸேரி மாம்பழத்துடன் உள்ளூர் மாங்கனிகளை இணைத்து புதிய ரக மாம்பழத்தை தயாரித்துள்ளார். பிரதமர் மோடியின் பெயரிடப்பட்ட இந்த புதிய மாம்பழ ரகத்திற்கு இந்திய வேளாண் ஆய்வு கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது. இந்த மாம்பழம் அதிகமான ஜூஸ் கொண்டதாகவும், ஒரு பழம் அரை கிலோ வரை எடைக் கொண்டதாக பெரியதாக இருக்கும். இந்த புதிய மோடி மாம்பழ செடிகள் தற்போது 1000 செடிகள் விற்பனைக்கு உள்ளதாகவும், அவற்றின் விலை ரூ.1000-க்கும் மேல் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த ரக பழங்கள் சந்தைக்கு புதிது என்பதால் இதன் விலையும் சாதாரண மாம்பழங்களை விட அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.