இந்தியாவுக்காக முதல் ஆஸ்கார் விருதை வென்ற பெண்மணி உயிரிழந்தார்!

Filed under: இந்தியா |

இந்தியாவுக்காக முதல் முதலில் ஆஸ்கார் விருதை வென்ற பெண்மணி பானு அதய்யா உடல்நலக்குறைவால் 91 வயதில் நேற்று மும்பையில் உயிரிழந்தார்.

இதைப் பற்றி அவருடைய மகள் கூறியது; மூன்று வருடத்துக்கு முன்பு என் தாய்க்கு பக்கவாதம் ஏற்பட்டது. அப்போதிலிருந்து அவருடைய காலத்தை படுக்கையிலேயே கழித்து வந்தார். நேற்று அதிகாலை அவர் காலமானார். அவரின் இறுதி சடங்கு தெற்கு மும்பையில் உள்ள சந்தனவதி மைதானத்தில் நடந்தது என்றார்.

மேலும், 1950 ஆம் ஆண்டு இந்தி திரைத்துறையில் ஆடை வடிவமைப்பாளராக வாழ்க்கையை துவங்கியவர் பானு அதய்யா. 100க்கும் மேலான படங்களில் வேலை பார்த்து உள்ளார். 1983ஆம் ஆண்டு ரிச்சர்ட் அட்டின்ரோ இயக்கிய “காந்தி” படத்துக்கு 8 ஆஸ்கர் விருதுகள் கிடைத்தது. அதில் சிறந்த ஆடை வடிவமைப்பாளர் விருதை பானு அதய்யா பெற்றார்.

இந்தியாவின் முதல் முதலில் ஆஸ்கார் வென்ற இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.