சமூகவலைதளமான யூடியூபில் பலர் லட்சக்கணக்கிலும், கோடிக்கணக்கிலும் சம்பாதித்து வருகின்றனர். அவர்கள் ஒழுங்காக வருமான வரி கட்டவில்லை என்று கூறப்படுகிறது. கேரளாவிலுள்ள பிரபல யூடியூபர்களின் வீடுகளில் வருமானவரித்துறை சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.
வருமானவரித்துறையினர் கேரளா முழுதும் பல்வேறு இடங்களில் யூடியூபர்களுக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை செய்து வருகின்றனர். யூடியூபர்கள் தங்களுக்கு கிடைக்கும் லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான வருமானதில் நிலங்கள், கட்டிடங்கள் மற்றும் அசையா சொத்துக்களை வாங்கி இருப்பதாகவும் ஆனால் அதற்கான வருமான வரி செலுத்தவில்லை என்றும் புகார் வந்ததை அடுத்து இந்த சோதனை நடைபெற்று வருவதாக புறப்படுகிறது. சோதனை முடிவில் தான் எந்தெந்த யூடியூபர்கள் எவ்வளவு வருமான வரி கட்டாமல் வரியை செய்துள்ளனர் என்று தெரியவரும் என்று கூறப்படுகிறது. இன்று கேரளா ஆனால் கூடிய விரைவில் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் உள்ள பிரபல யூடியூபர்களின் வீடுகளில் சோதனை நடத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.