மத்திய அமைச்சர் ராஜேந்திர சிங் ஷெகாத் கொரோனா தொற்றால் பாதிப்பு!

Filed under: இந்தியா |

மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவதுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியாவில் 28 லட்சத்திற்கும் மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். 50 ஆயிரத்துக்கும் மேல் பலியாகியுள்ளனர். மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், கர்நாடகா போன்ற மாநிலங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், ஆகியோரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய ஜல்சக்தி துறையின் அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்துக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை அவரின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், கொரோனா அறிகுறிகள் இருந்ததால் நான் பரிசோதனை செய்து கொண்டேன். அதில் கொரோனா இருப்பது உறுதி செய்யபட்டுள்ளது. இதனால் மருத்துவர்களின் ஆலோசனை ஏற்று மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகிறேன். கடந்த சில நாட்களாக என்னை தொடர்பு கொண்டவர்கள், தங்களை தனிமைப்படுத்தியும் மற்றும் பரிசோதனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் அனைவரும் ஆரோக்கியமாக இருந்து உங்களை கவனித்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் பதிவிட்டுள்ளார்.