நடிகர் விஜய் தற்போது வெங்கட்பிரபுவின் G.O.A.T திரைப்படத்தின் ஷீட்டிங்கின்போது தனது ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது The Greatest Of All Time திரைப்படத்தில் நடித்து வருகிறார். படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்தின் ஷூட்டிங் சென்னை மற்றும் தாய்லாந்து ஆகிய இடங்களிலும், ஐதராபாத்தில் முக்கியமான காட்சிகளை படமாக்கப்பட்டது. சென்னை கோவளம் உள்ளிட்ட பகுதிகளில் முக்கியமானக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இன்று The Greatest Of All Time பட ஷூட்டிங்கின்போது நடிகர் விஜய், ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார். இப்புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. “லியோ” படத்திற்கு பின் ரசிகர்களால் பெரியளவில் எதிர்பார்க்கப்படும் இப்படம், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தொடர்ச்சியாக விடுமுறைகள் வருவதால் ஒருவாரத்திற்கு முன்பே இப்படத்தை ரிலீஸ் ஆக உள்ளதாகக் கூறப்படுகிறது.